கொரோன மூன்றாம் அலை எப்பொழுது ? எப்படி தயாராக வேண்டும் ?
இரண்டாம் அலையில் இருந்து மீண்டுவந்து நிம்மதி பெருமூச்சி வாங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம்மிடையே பரவலாக பேசப்படுவது மூன்றாம் அலை பற்றிய கேள்விகள்களும் வதந்திகளும் தான்.அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.இந்திய அரசு சமீபத்தில் கொரோன மூன்றாம் அலை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது .
மூன்றாம் அலை எப்போது ?
முருத்துவ ஆய்வாளர்களின் கருத்துப்படி மூன்றாம் அலை தனது இயல்பான வரைமுறையில் சென்றால் செப்டெம்பர் அக்டொம்பரில் தனது அதிகபட்டச் உச்சத்தை தொடும் அல்லது இயல்பு சிறிது மாற்றம்கண்டு நவம்பர் மாதத்தில் கூட தொடலாம் என்று கூறியுள்ளனர்.
கொரோன வைரஸ் ஆனது இதன் பிறகு எந்தவித மியூட்டேசன் அடையாமல் இருந்தால் கொரோன மூன்றாம் அலையின் தாக்கம் குறைவாகவே இருக்கும். (
மியூட்டேசன் - என்பது வைரஸ் தனக்கு எதிரான எதிர்புசக்தியை முறியடிக்க
பரிணாமவளர்ச்சி அடைந்து தனது தகவமைப்பை மாற்றி கொல்வதேயாகும்.இவ்வாறு
மாற்றம் அடைந்த வைரஸ் அதன் முந்தய பரவும் வேகம் , பாதிப்பை ஏற்படுத்தும்
திறன் ஆகியவற்றில் மிகவும் பலமானதாக மாற்றமடைந்து இருக்கும்.)
முதல் மற்றும் இராண்டாம் அலையின் பாடம்....!
முதல் அலையின் உச்சமாக தமிழகத்தில் ஜூலை 28 நாள் 2020 தில் தோராயமாக 6000 என்ற எண்ணிக்கையில் தினசரி தோற்று இருந்தது.இராண்டாம் அலையில் உச்சமாக மே 21 நாள் 2021 தோராயமாக 36,000 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு இருந்தது.மூன்றாம் அலையானது இதை காட்டிலும் மோசமாக இருக்கும் என்பதே மருத்துவ அறிஞர்களின் கருத்து.
கொரோன டெல்டா பிளஸ் வகை ...!
டெல்டா வைரஸ் என்பது முதலில் இந்தியாவில் தான் காணப்பட்டது பிறகு மெல்ல பரவி வேறு சில நாட்டுக்கு பரவியுள்ளது.இப்போது இராண்டாம் அலையின் முழு தாக்கமும் முடிவுக்கு வராத நிலையில்இந்த டெல்டா வகை கொரோன மாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் B.1.617.2 ஆக மியூட்டேசன் அடைந்து உள்ளது.இந்த வைரஸ் ஆனது முன்னர் பார்த்தது போல் மிகவும் வேகமா பரவும் தன்மைகொண்டது.இப்போது இந்தியாவி பஞ்சாப் ,தமிழ்நாடு ,மகாராஷ்டிரா & மத்திய பிரதேஷ் போன்ற இடங்களில் இது தென்பதுகிறது.இது மூன்றாம் காரணமா அமையலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எப்படி தயாராவது ?
- கூடுமான விரைவில் முதலில் எதாவது ஒரு கொரோன தடுப்பூசி கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்(தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு முந்தய பதிவை பார்க்கவும் ')
- பொதுஇடத்தில் கட்டாயம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
- சமூக இடைவெளி 6 அடி கடைப்பிடிக்க வேண்டும்
இது போன்று பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள கீழேயுள்ள முகநூல் பக்கத்தை தொடரவும்செய்யவும்.உங்கள் சந்தேகங்களை, உங்கள் மேலான கருத்துக்களையும் கமன்ட் பாக்ஸில் பதிவிடவும்.அடுத்து பேசவேண்டய தலைப்பை பரிந்துரை செய்யவும்.இந்த தமிழ் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கள் மற்றவர்களுக்கு பகிரவும்.நன்றி !
Info 👍❣️
ReplyDeleteSema article na
ReplyDelete